தற்கொடையாளர்கள்

[su_heading size=“16″ margin=“0″]தற்கொடையாளர்கள்   [/su_heading]
தமிழரின் வீர அடையாளம் எம் மாவீரச் செல்வங்கள்
நம் நெஞ்சில் வைத்துப் பூசிக்கும் காவல் தெய்வங்கள்.
தன்னிகரில்லா உயிர் தியாகத்தால் மரணத்தை வென்று
சென்றான் கப்டன் மில்லர் முதல் கரும்புலியாய் நின்று.
அவரைத் தொடர்ந்து எத்தனையோ வீரத்தமிழ்ப் புதல்வர்கள்
இனத்தின் விடியலுக்காய் தீயில் வெந்தனர் எம் தேசப்புயல்கள்.
இவ்வீரர்களை நினைவு கூறும் நாள் யூலை ஐந்து
ஈகைச்சுடர் ஏற்றுவோம் தமிழர் நாம் ஒன்றாய் இணைந்து.
கரும்புலிகள் என்றும் தமக்காய் வாழாதவர்கள்
அவர்கள் எங்களுக்கு வெளிச்சம் தர ஒளிவிளக்கானவர்கள்.
சாவையே தாயத்தாய் தம் கழுத்தில் சுமந்தவர்கள்
சாவு என்னும் சொல்லை தம் சரித்திரத்தில் இல்லாது ஒழித்தவர்கள்.
இளமை நதியில் குளித்து மகிளும் இளம் வயதினர்கள்
இனத்துக்காய் நெருப்பாற்றில் எதிர்நீச்சல் போட்டவர்கள்.
வாழும் வயதில் ஆசாபாசங்களைத் துறந்தவர்கள்
கந்தகப் பொதியுடன் எதிரி வாசல் வரை சென்றவர்கள்.
உடலோடு உடலாக வெடிகுண்டை ஏந்தியவர்கள்
உங்கள் பெயர்கேட்டே எதிரியை கதிகலங்க வைத்தவர்கள்.
கரும்புலிகள் பஞ்சு போன்ற நெஞ்சம் உடையவர்கள்
இவர்கள் இறும்பு பொன்ற உறுதியும் உள்ளவர்கள்.
சானைத் தலைவனின் வீரமறவர் அணியில் இணைந்தவர்கள்
வீரதீரச் செயல்களால் உலகத்தையே வியக்க வைத்தவர்கள்.
தமிழ்த் தேசியத்தின் உயிர் மூச்சில் ஒன்றாய்க்கலந்தவர்கள்
பாரியை வென்ற தற்கொடையாளிகள் எம் கரும்புலி வீரர்கள்
தம் இன்னுயிர் தந்து எம் உயிர்காத்த உத்தமர்கள்
தமிழீழத்தில் தணியாத தாகம் கொண்டவர்கள்.
இவர்கள் நாம் என்றும் மறவாத உயிருள்ள காவியங்கள்
காலத்தால் அழியாதவர்கள் எம் கரும்புலி நாயகர்கள்.

புறப்படு தமிழா புறப்படு –

எமது தேசியத் தலைவர் பிரபாகரன் காட்டிய வழியில் புறப்படு.

 

 


 

 

[su_quote url=“Hon.V. Prabhakaran“]Wir sind keine Rassisten, auch keine kampfgierige Gewalttäter. Wir sehen das singhalesische Volk weder als Feind noch als Gegner an. Wir sind keine Feinde der demokratischen Prinzipien. Wir kämpfen lediglich nur für die demokratischen Grundrechte unseres Volkes. – Hon.V. Prabhakaran [/su_quote]

About Author

Connect with Me:

Leave a Reply