தைப்பொங்கல்

காற்று அசைத்திடும் நெருப்பில்
பானையில் போட்டு வைத்த அரிசியோடு
பொங்கி வருவது நுரை அல்ல
எம்முள் ஊற வைத்த சுதந்திர தாகம்

கதிரவன் செக்க சிவந்த நிறத்தொடு
காலையில் பிறந்து
இரவில் மறையும் வரைக்கும்
எத்தனை நாடகம் மண்ணில்

உழவன் ஏர் எடுத்து மென்மையோடு
மண்ணில் பதித்து அன்னை மண் காயப்படாமல்
உழுது
உழவன் வியர்வை மண்ணில் விதைக்க
நெல் மணி பரிசாக கொடுக்கும் கதிரவா
வணக்கம்

உமக்கு நன்றி சொல்லும் இவ்வேளையில்
நாமும் உம்மைப் போலவே
சுதந்திரமாக
வாழ விரும்புகின்றோம்

பிறந்துள்ள புதிய ஆண்டில்
இன்றைய பொங்கல்
அடக்குமுறைகளிற்கு எதிராகவும்,
ஈழத்தமிழர்களின் உரிமைகளிற்காகவும்,
சுதந்திரத்திற்காகவும்
பொங்கட்டும்

அனைத்து உறவுகளுக்கும் தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனி  இனிய தமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.

About Author

Connect with Me:

Leave a Reply