தமிழினவழிப்பு மே 18

இளைய தலைமுறை
எழுந்திட வேண்டும்
எம்மினத்தின் அழிவிற்கு
நீதியை கேட்டிட வேண்டும்!

கல்வியையும் அறிவையும்
வளர்த்திட வேண்டும்
பாரினில் ஒன்றாய்
இணைந்திட வேண்டும்!

தமிழீழத்தை உயிராய்
மதித்திட வேண்டும்
அதை மீட்டிட தினமும்
உழைத்திட வேண்டும்!

மடிந்தவர் கனவு மலர்ந்திட வேண்டும்
தமிழீழக்கொடியும் உயர்ந்திட வேண்டும்
பலம் கொண்ட தமிழீழத்தை
கட்டியெழுப்பிட வேண்டும்!