கார்த்திகைப்பூவின்ஏக்கங்கள்

எம் ஈழத் தேசத்தில் எப்போது
மலரும் சுதந்திரம் …… !

நான் எப்போது மலர்வேன்
சுதந்திரமாக …..!

நான் சுதந்திரக் காற்றுப் பட்டே‘
மலர விரும்புகின்றேன்……!!

ஆனால் ………!!!

நான் ஒவ்வொரு முறையும்
மலர்கையில் !
என்னில் சுதந்திரக் காற்றோ
வீசப் படவில்லை……!!

மாறாக அழுகையின் குரல்
தான் கேட்கின்றது …………!!
இதனால் இன்னல் படுகின்றேன்…..!!

என்னால் ஒவ்வொரு நாட்களும்
மலர்ந்து அழுது கொள்ள முடியாது ………!!

இதனாலே வருடத்தில் ஒரு
முறை மலர்கின்றேன் ……. !!
அது புனித மாவீரர்களை
நினைவு படுத்தவே ……. !!

நான் மீண்டும் மலர்கையில் என்னில்
சுதந்திரக்காற்றது வீசப்பட வேண்டும் ..!!

நான் நம்புகின்றேன் விரைவில்‘
சுதந்திரம் மலரப் போகும்
ஈழத் தேசத்திலே நான் சுதந்திரக்காற்றில்‘
மலர்வேன் என்பதை நம்புகின்றேன் …..!!!!!

About Author

Connect with Me:

Leave a Reply